எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் … Continue reading
மல்லிகையை எல்லோரும் பரிகாசம் செய்தார்கள். எல்லோரும் செய்தார்களோ என்னமோ, அவருக்கு அப்படித் தோன்றிற்று. முதன் முதலாக விசாரித்தவரே பரிகாசம் செய்து, சிரித்துவிட்டுப் போனார். அதனால், பிறகு கேட்ட யாருமே கேலி செய்வதுபோல மல்லிக்குப் பட்டது. காலையில் அவர் வழக்கம்போல ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஜபம், பூஜைகளை முடித்து, தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். எட்டரை மணியிருக்கும், ஊர்க்கோடி திரும்பியதும் கூட்டுறவு மளிகைக்கடை மீது வைத்திருக்கும் ‘ரேடியோ’ப் ‘பொனல்’ ஓய்ந்துவிட்டது. வெயில், தெரு முழுவதும் விழுந்து … Continue reading
ஒரு கிழ டைப்ரைட்டர் (தட்டச்சுப்பொறி) பிறந்தது இங்கிலாந்தில் ஒரு தொழிற்சாலையில். இப்போது 83 வயது முடிந்துவிட்டது. ஆயிரம் பிறை கண்டாதாச்சே. இந்தியாவில் குடியேறிய இத்தாலிய, அமெரிக்க, இங்கிலாந்தில் இன்னும் மற்ற விதேச டைப்ரைட்டர்களும், இந்தியாவிலேயே பிறந்த சுதேச இள – நடுவயது டைப்ரைட்டர்களும் கூடி விழா எடுத்தன. “”முதுபெரும் பொறியீர், மூத்த பொறியீர், ஆயிரம் பிறை கண்ட உமக்கு ஆயிரம் தண்டன்கள்…” என்று தொடங்கி தென்னிந்தியாவின் தோல் ஏற்றுமதிக்கும் பொதுவான பொருளாதார உயர்வுக்கும் முதுபெரும்பொறியர் ஆற்றிய சேவையைப் … Continue reading
மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது. “ஏண்டாய்யா, குழந்தையைக் கொடுத்தியே போதாதா? வியாதியை வேற கொடுத்து அனுப்பிச்சுருக்கியே அதை?” என்று மனசிலே சொல்லிக் கொண்டே சுவரில் அசைந்த காலண்டரைப் பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள். கழுவாத சாயங்கால மூஞ்சி மாதிரி எண்ணெய்ப் பாடம் கறுத்து மின்னும் தலையணையில் … Continue reading
விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. ‘இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ‘ என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து ‘ட்ரான்ஸிட் ‘ கூடத்திற்குப் போனார். இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ‘ ஏன் இத்தனை கூட்டம் ? கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் … Continue reading
‘ஈச்வரதாஸ் ‘ என்று வெளியே வந்த பியூன் கூப்பிட்டான். ஈச்வரதாஸ் எழுந்தான். இவ்வளவு சீக்கிரம் கூப்பிடுவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எட்டு பேர் போய் விட்டு வந்துவிட்டார்கள். என்ன கேள்வி கேட்டார்கள் என்று வெளியே வந்த ஒவ்வொரு ஆளிடமும் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக ஏதோ சொல்லிவிட்டு அவர்கள் போய் விட்டார்கள். கேள்விகளைச் சொல்லிவிட்டால் மற்றவர்கள் ஜாக்ரதையாகத் தயார் செய்து கொண்டு பதில் சொல்லிவிடுவார்களோ என்று அவர்கள் கவலைப்பட்டிருக்கவேண்டும். முன்னால் தெரிந்து கொள்வதும் ‘காப்பி ‘ … Continue reading
வெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை – யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு – ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் … Continue reading
தி. ஜானகிராமன் அவர்களால் ”கல்கி” வார இதழில் 1962 முதல் 1964 முடிய தொடர்கதையாக எழுதப்பெற்று, பின்னர் ஏப்பிரல் 1965 – இல் நூல் வடிவம் பெற்ற புதினம் ”அன்பே ஆரமுதே” ஆகும். இக்கதையை உளவியல் நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை விளங்குகிறது. தி. ஜானகிராமன் – ஓர் அறிமுகம்:- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேவங்குடி என்னும் சிற்றூரில் பிறந்தவர் தி. ஜானகிராமன். இவரது பெற்றோர் தியாகராஜ சாஸ்திரிகள், நாலெட்சுமி அம்மையார் ஆவர். இவரது காலம் 1921 முதல் 1982 … Continue reading
திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும்காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு … Continue reading
என்னடாது?” பிள்ளையின் முகத்தில் அருவருப்பும் கோபமும் முண்டி நின்றன. “நிறுத்து!” என்று கையை உயர்த்தினார். நாகஸ்வர ஓசை நின்றது. “என்னடாது ரோதனை! விசிஞ்சதும் விடியாததுமா! இதையெல்லாம் ராத்திரியிலே வச்சுக்கிட்டிருந்தே ; சரி, தொலையுதுன்னு நெனச்சா, காலமேயும் ஆரமிச்சிட்டியே. ஏண்டா கோடாலிக்காம்பு, என்னடா இதெல்லாம்? காலமே பிலஹரியும் கேதாரமும் பாடி ஆகாசம் முழுக்கப் பூப்பூவாக உலுக்க வேண்டிய வேளையிலே, இதென்னடா ஒப்பாரி! உனக்கென்ன, பைத்யம் கிய்த்யம் பிடிச்சிருக்கா!” பிள்ளையாண்டன் நாகஸ்வரத்தைத் தடவிக்கொண்டே உட்கார்ந்திருந்தான், பேசவில்லை. “கண்ணைப் புட்டிகிறதுக்கு முன்னாடி … Continue reading
‘மணியார்டரா ‘ எனக்கா ‘ ‘ ‘ஆமா ஸ்வாமி ‘ உங்களுக்கேதான் ‘ ‘ ‘உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ‘ நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ‘ என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து. ‘கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க…எம். … Continue reading
சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார். “நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான் போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்கு இருக்கு? நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா? சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு?” என்று யாரோ சொல்வது போலிருந்தது. யாரும் சொல்லவில்லை. … Continue reading
உப்பிலி வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. கதவு திறக்கிறது. தட்டுச் சுற்று வேட்டி. சட்டை போடாத வெற்று உடம்பு. தோளில் சின்னச் சின்னக் கட்டம் போட்ட சிவப்பு காசித் துண்டு. தலையில் குடுமி. முன்பக்கம் சவரம் செய்யாது, பெண்பிள்ளை போல் நெற்றியிலிருந்தே வாரிச் சீவப்பட்ட தலை முடி. அதில் அங்கும் இங்கும் நரை. நெற்றியில் குங்குமம். குங்குமத்துக்குக் கீழ் துளி சந்தனப் பொருக்கு. வேர்வையில் கறுத்த பூணுல். கையில் ஒரு பையோடு இறங்குகிறார். திண்ணைப் பக்கம் … Continue reading
பத்து செட்டி வாசலோடு போகிறார். ரொம்ப கஷ்டம். பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக்குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப ‘ போல சவரம் செய்த தலை. ‘ப ‘வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம்கூட இல்லை. காலை, பகல், மாலை– எந்த வேளையிலும் நாமம் இல்லை. குளிக்கக்கூட அவருக்கு மனசு வரவில்லை–இல்லை, குளிப்பதையே அடியோடு மறந்துவிட்டாரா ? ஏற்கனவே அவர் மாநிறத்துக்கும் … Continue reading
‘ஐயா…ஐயா ‘ பதில் இல்லை உள்ளேயிருந்து ‘சுவாமி ‘ சுவாமி ‘ பதில் இல்லை. ‘வெற்றிலைக்காரம்மா ‘ வெத்தலைக்காரன் வந்திருக்கேன்…. யாரு உள்ள ‘ ‘ ‘யாரு ? ‘ ‘நான் தாம்மா வெத்திலெ ‘ வேதாந்தி இடை வழியைப் பார்க்கிறார். நடை வழியில் சுவரை ஒட்டி ஒரு திண்ணை. அந்த திண்ணையின் மேல் உட்கார்ந்திருந்த கிழமுகம் தெரிகிறது. பொல்லென்று வெளுத்த தலை. நெற்றியில் சந்திர வளையம் போல் திருமண். ‘யாரு ‘ அம்மாவா ‘ எப்ப … Continue reading
இடம்–வடசென்னை. காலம்–விடியற்காலை. ஒரு மிக நீளத் தெருவின் கோடியில் ஒரு கடை இன்னும் திறக்கவில்லை. திறந்த பிறகு தான் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட்கடையா, மளிகைக்கடையா, ரிப்பன்–வளையல் குங்குமம்–சவுரி கடையா என்று தெரியும். கடைக்கதவுகளுக்கு முன்னால் நாலு சவுக்கைக் கழிகள் மேல் போட்டிருக்கிற பலகை. கீழே சாக்கடை. பலகை மேல் ஒரு ஆசாமி படுக்கலாம். படுத்திருக்கிறார். கண்ணைத் திறந்து படுத்திருக்கிறார். கால் மணிக்கு முன்பு ஒரு காக்காய்க் கூட்டம் கத்திக் கத்தி அவர் தூக்கத்தைக் கலைத்து விட்டது. … Continue reading
நான் தூங்குகிறேனா என்ன ‘ இல்லையே…..நான் விழித்துக்கொண்டிருக்கிறேனே. பின்னே ஏன் இந்தச் சந்தேகம் ? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும் ? நாய்க்கு மொழி ஏது ? இருக்கிறது ஒரு மொழிதானே ? குரைப்பு ஒன்றுதானே மொழி…இல்லாவிட்டால் மீமீ என்று சன்னக் குரலில் குழையும் வாலையும் குழைக்கும். பின்னே ஏன் எனக்கு மட்டும் ஒரு நாய் இங்கிலீஷில் குரைப்பதுபோல் கேட்கிறது ‘ கனவா ‘ இல்லையே. அரைத் தூக்கம் கூட இல்லையே. நல்ல முரட்டு விழிப்பாகத்தானே … Continue reading
(ஒரு இசைக்கலைஞர் சொன்ன கதை) ‘நீர் எழுத்தாளர். கதை கிதை எல்லாம் எழுதுகிறீர். எனக்குப் பாடத்தான் தெரியும். எழுதத் தெரியாது. அதனால் நான் சொன்னதை அப்படியே நீர் எழுதும். நீர் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் ஆச்சே. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் இசைக் கல்லூரியில் பயின்று பட்டம் வாங்கினேன். நானும் என்னுடைய சகபாடிகளான இன்னும் பத்தொன்பது பேரும் சேர்ந்து பட்டத் தாளைப் பெற்றுக் கொண்டோம். அதற்காக வழக்கம் போல ஒரு பட்டமளிப்பு விழா நடத்தினார்கள். நாங்கள் … Continue reading
‘ரொம்ப பிஸியா இருக்காப்பிலியோ ? ‘ புத்தான் துவாரத்தில் நூல் கோத்த ஊசியை நுழைத்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். உப்பிலி இடைக்குழி நிலையின் நாதாங்கியில் ஒரு கையும், எதிர் நிலையில் ஒரு கையுமாக முதுகை முன்னே வளைத்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். பல் எல்லாம் தெரிகிற புன்னகை. கால் நிலைக்கப்பால் இடைக்கழியில். ‘ஒரு பிஸியும் இல்லை. புத்தான் விழுந்துடுத்து. தைச்சிண்டிருக்கேன். வாங்கோ- ‘ ‘பரவால்லே ‘ ‘என்ன பரவால்லெ. படிதாண்டா விரதமா-வாங்கோ. ‘ ‘இல்லெ ஸ்வாமி-அவசரம். ஊருக்குப் … Continue reading
வராந்தாவில் நடக்கும்போதே சீராவன் மைத்துனரை எச்சரித்தான். ‘துடை வரைக்கும் எடுத்தாச்சானு அவளுக்குத் தெரியாது முழங்காலுக்குக் கீழே தான் எடுத்திருக்குன்னு இன்னும் நினைச்சிட்டிருக்கா அவ ரண்டாந் தடவை க்ளோராஃபாம் கொடுத்தப்ப, வேற எதுக்கோ சின்ன ஆப்ரேஷனுக்காக கொடுக்கறாங்கன்னு சொல்லிருக்கு. முத ஆப்ரேஷனை சரிபண்றதுக்குன்னு சொல்லி வச்சிருக்கு. நீங்களும் துடை வரைக்கும் எடுத்தாச்சாமேன்னு கேட்டுடாதீங்க. தானே கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கட்டும்னு இருக்கிறோம். ‘ மைத்துனர் பதில் பேசவில்லை. கோபமும் துயரமுமாக வாய் மூடியாக நடந்தார். நோயாளியின் அறைக்குள் நுழைந்தார்கள். ‘வாங்கண்ணா … Continue reading