முந்தையவை

ஜெயகாந்தன்

This category contains 53 posts

வெளிநாட்டு பயணம் – ஜெயகாந்தன்


நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, “அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே…’ என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது. வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், … Continue reading

ஜெயகாந்தனும் எனது பாவனைகளும் – பி.ச.குப்புசாமி


(திரு. பி.ச. குப்புசாமி மீசை முளைக்காத பருவத்திற்கு முன்பே ஜெயகாந்தன் அவர்களை நாடிச் சென்று ஒட்டிக் கொண்ட நண்பர். இவர் வடாற்காடு மாவட்டம் குக்கிராமம் ஒன்றில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் இருக்கும் காடு, மலை தேடி ஜெயகாந்தன் அடிக்கடி சென்று விடுவார். இவர் ஒரு நல்லாசிரியர். நன்றாக எழுதுவார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக் கொண்டவர். இவரது ‘கங்கவரம் ‘ சிறுகதை திரு. விட்டல் ராவ் அவர்களால், இந்த நூற்றாண்டின் சிறந்த … Continue reading

வாழ்வின் மகத்துவம் – ஜெயகாந்தன்


2000 ஜூலை மாதம் 22ஆம் தேதி, நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கமும் சிந்தனைவட்டமும் இணைந்து நடத்திய ‘ஜெயகாந்தன் மாலைப்பொழுது ‘ நிகழ்ச்சியில் ஆற்றிய சொற்பொழிவு.  நண்பர்களே பெரியோர்களே தாய்மார்களே உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலர் எனக்கு எழுத்துக்களின் மூலம் ஏற்கெனவே என்னை அறிந்தவர்கள். இங்கே எனது கருத்துக்களை எனது கட்டுரைகளை ஒரு நாடக வடிவிலே உங்களுக்குத் தந்தவர்கள் தொழில் நடிகர்கள் அல்லர். அவர்களுக்கு வேறு தொழில்கள் வேறு தகுதிகள் உண்டு. தாங்கள் வாசித்ததை உங்களோடு பகிர்ந்து … Continue reading

அன்பைப் பற்றி… – ஜெயகாந்தன்


(“ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” நாவலுக்கு ஜனவரி 1971-ல் ஜெ.கே. எழுதிய முன்னுரை இத்தலைப்பில் இங்கு இடம் பெறுகிறது.) காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும். காதல் வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும் மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன. இந்தக் கதையில் வரும் கல்யாணியோ ரங்காவோ காதலையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர்கள் அல்ல. வாழ்க்கையில் அவர்கள் இருவருக்குமே வேறு வேறு லட்சியங்களும் வேறு வேறு … Continue reading

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் – ஜெயகாந்தன்


கண்ணாடியின் முன்னே நின்று படிய வாரிய கிராப்பின்மேல் சீப்பின் பின்புறத்தை வைத்து அழுத்தி அழுத்தி வளைவுகள் ஏற்படுத்தும் முயற்சியிலேயே கடந்த பதினைந்து நிமிஷமாய் முனைந்திருக்கிறான் சீதாராமன். ஹேர் ஆயில், ஸ்னோ, பவுடர், சென்ட் ஆகியவற்றின் கலவை மணம் ஒரு நெடியாய்க் கமழ்கிறது அந்த அறையில். கண்ணாடிக்குப் பக்கத்தில் அந்த சிறிய மேஜையின்மேல் அவனது அலங்கார சாதனங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் நடுவே அவனது ‘ஷேவிங் ஸெட்’ சுத்தம் செய்யப்படாமல் அப்படியே சோப்பு நுரையுடன் கிடக்கிறது. அலங்காரம் செய்துகொள்ள … Continue reading

ஆளுகை – ஜெயகாந்தன்


1 அவன் அவளுடைய படத்துக்கு நேரே படுக்கையை விரித்து, மல்லாந்து படுத்திருந்தான். படத்துக்கும் அவனுக்கும் நடுவே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அமைதியான இரவில், ஓசையிட்டவாறு சுவரிலிருந்த கடிகாரத்தில் மணி அப்போது ஒன்றேகால் . . அவன் விழிகள் அந்தப் படத்தையே வெறித்துக் கொண்டிருக்க, அவன் உதடுகளில் புன்னகையும் அவளோடு பேசுகின்ற தனி மொழிகளும் மௌனமாக நௌ¤ந்துகொண்டிருந்தன. அவனுக்கு அவளே நினைவாகி, அந்தப் படமே அவளாகிப் பதினைந்து நாட்களாகின்றன. அவளது இழப்பின் சோக நினைவுகளுடன் முன்நேரத்திலேயே உறங்கிப்போன அவனை, … Continue reading

அந்தக் கோழைகள்!… – ஜெயகாந்தன்


காம்பௌண்ட் கேட்டிற்கு நேரே வராந்தா விளக்கு வெளிச்சத்தில் சாய்வு நாற்காலியில் ஆள் காட்டி விரலைப் பக்க அடையாளத்திற்காக நடுவில் நுழைத்துப் பிடித்த ‘பால்ஸாக்’கின் புத்தகம் ஒரு கையிலும், இன்னொரு கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுமாய் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த டாக்டர் ராகவன் சாய்ந்து படுத்தான். அப்போது மணி மாலை ஏழுதான். அவன் தலைக்கு நேரே வராந்தா சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போர்டில் கண்டுள்ளபடி பார்த்தால் இது நோயாளிகளைச் சந்திக்க வேண்டிய நேரம்தான். நோயாளிகள் வரவில்லையென்றால் ஆஸ்பத்திரி அறைக்குள்ளேயே டாக்டர் அடைந்து … Continue reading

உண்மை சுடும் – ஜெயகாந்தன்


அது சோமநாதனின் கண்களை உறுத்திற்று. பரமஹம்சரும் விவேகானந்தரும் இருபுறமும் இருக்க, அந்த வரிசையில் தனது படத்தையும் வைத்திருக்கும் கோலத்தை முகம் சுளித்து யோசித்தவாறு மூக்குக் கண்ணாடியை நன்றாக உயர்த்திவிட்டுக் கொண்டு எழுந்து, சுவரருகே சென்று கூர்ந்து நோக்கினார் சோமநாதன். அப்போது ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு வர உள்ளே சென்றிருந்த அவரது மருமகள் கோதை, கையிலேந்திய கப் அண்ட் ஸாஸருடன் ஹாலுக்குள் வந்தாள். சோமநாதன் அவளைத் திரும்பிப் பார்த்தார். “இதெல்லாம் யாருடைய வேலை?” என்று தன் படத்தை ஆள் … Continue reading

பாவம் பக்தர்தானே! – ஜெயகாந்தன்


ஊரின் நடுவே அந்தக் கோயில் இருந்தது. இருந்தாலும் சந்தடியின்றி அமைதியாக இருந்தது. கோயிலென்றால் ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலிருந்தே தரிசித்து ‘உயர்ந்த சிகரக் கும்பம் தெரியுது’ என்று பாடத் தகுந்த பெரிய கோபுரங்கள் ஏதும் கிடையாது. பார்த்துப் பிரமித்து நிற்காமல், சொந்தத்துடன் நம் வீட்டுக்குள் நுழைகிற உணர்வோடு அந்தக் கோயிலில் எவரும் பிரவேசிக்கலாம். பெரிய கதவுகள் அடைத்துத் தடுக்காது. கோயிலைச் சுற்றி நாலு அடி அகலத்துக்குப் பிரகாரமும் மதிலும் உண்டு. கருங்கள் தளவரிசை, பக்கத்தில் அடர்ந்து நிற்கும் … Continue reading

தாம்பத்யம் – ஜெயகாந்தன்


தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்கு ஒரு புடவை, இரண்டணாவுக்கு வளையல் – ஆக ஐந்து ரூபாய் செலவில் ரிக்ஷாக்கார – கூலிக்கார ஏழைக் கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சிதத்தை மருதமுத்து கண்ணாலம் கட்டிக் கொண்டான். அந்த ஐந்து ரூபாயைச் சேர்ப்பதற்கு அவன் ஒரு மாதம் முழுவதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தனக்குக் கிடைக்கும் கூலிக் காசில் தினந்தோறும் இரண்டணா … Continue reading

கண்ணாமூச்சி – ஜெயகாந்தன்


அவள்தான் அவனைப் படத்துக்குக் கூப்பிட்டாள். இதொன்றும் முதல் தடவையல்ல; தேவகி, நடராஜனை எத்தனையோ தடவை சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறாள். நடராஜனை மட்டுமா? அவனை அழைத்துக் கொண்டு போனது பிறர் கண்களை உறுத்துமோ என்கிற அச்சத்தில், தனது டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் கண்ணப்பனோடும், ரங்கசாமியோடும் தனித்தனியாகவும் சில சமயங்களில் கும்பலாகப் பலரோடு சேர்ந்தும் அவள் சினிமாவுக்குப் போவதுண்டு. ஆனால் அதெல்லாம் வேறு. நடராஜனோடு சினிமாவுக்குப் போகும் அனுபவம் வேறு என்பது அவள் மனசுக்குத் தெரியும்; நடராஜனுக்கும் தெரியும். அதனை … Continue reading

பலவீனங்கள் – ஜெயகாந்தன்


காட்சி 1 பெங்களூரில் ஓர் உயர்தர நவீன ஹோட்டலின் மாடி அறையின் உட்புறம். அறைக் கதவு வெளியே பூட்டியிருக்கிறது. அறையிலிருப்பவன் மத்தியானமே வெளியே போயிருக்க வேண்டும். வலது கோடியில் உள்ள டைனிங் டேபிளின் மேல் சாப்பிட்ட தட்டுகள் சுத்தம் செய்யாமல் கிடக்கின்றன. அது ‘சிங்கிள் ரூம்’ ஆனதால் டைனிங் டேபிளுக்குப் பின்னால் அந்த ஒற்றைக் கட்டில் இருக்கிறது. கட்டிலின் மேல் டிரஸ்ஸிங் கவுனும் நாலைந்து புத்தகங்களும் இறைந்து கிடக்கின்றன. நேரே சுவரில் உள்ள அல்லிப்பூ மாதிரி அமைந்த … Continue reading

பயிற்றிப் பல கல்வி தந்து… – ஜெயகாந்தன்


ஒரு மொழியும் அந்த மொழியைச் சார்ந்தவர்களும் வளர்வதற்குத் தங்குதடையற்ற மொழிச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம் இருத்தல் வேண்டும். கல்வி ஒரு காலத்தில் கற்பவனின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை சமூக அடிமைகளாக்கும் கருவியாகவே இருந்து வந்திருக்கிறது. நமது அடிமைக் கால மெக்காலே கல்வி முறை, அதுவே கல்வியின் நோக்கம் என்ற பிரகடனத்துடனே செயல்பட்டது. அக்காலத்தில் கல்விக் கூடங்களையே புறக்கணித்த ஞானவான்கள் பலர் தோன்றினார்கள். எழுதப் படிக்கத் தெரியாத சான்றோர்களும், தனவந்தர்களும், வணிகர்களும்கூட இருந்தனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இவர்களின் … Continue reading

தமிழும் தனித்தமிழும்! – ஜெயகாந்தன்


தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல. இந்தத் தௌ¤வு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தௌ¤வு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள். தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல – அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் … Continue reading

ஏன் எழுதுகிறேன்? – ஜெயகாந்தன்


எழுதுகின்ற நம்மிடையே இப்படி ஒரு கேள்வி பிறந்திருப்பதும் இதற்குப் பதில் சொல்வதும் அவசியம் என்று நாம் உணர்ந்து இங்கு கூடியிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற கேள்வியிலேயே ஓரளவு – பொதுவான – பதில் ஒன்று அடங்கியிருக்கிறது. எதற்காகவோதான் நாம் எழுத வேண்டும் என்பதைத் தாங்கி நிற்கும் இக்கேள்வி எதற்காகவோதான் எழுதுகிறோம் என்ற பொதுவான பதிலுடன், ஒவ்வொரு எழுத்தாளனிடமும் குறிப்பாக ‘நீ எதற்கு எழுதுகிறாய்?’ என்று குறிப்பான ஒரு பதிலையும் எதிர்பார்த்து நிற்கிறது. ஒருவனைப் … Continue reading

ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் – ஜெயகாந்தன்


அது இரண்டாம் உலக மகா யுத்த காலம்! அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது; முடியவில்லை. ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பி விட்டான். அவன் விருப்பத்துக்குப் புறம்பாக அவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். அவன் ராணுவத்துக்கு இனிமேல் உபயோகப்பபட மாட்டானாம். அவன் இப்போது – ராணுவ வாழ்க்கை மென்று எறிந்த சக்கை. அவனது வருகையை எதிர்பார்த்து வரவேற்கவோ, கொண்டாடவோ அவனுக்கு யாருமில்லை. அது அவனுக்குத் தெரியும். எனினும் வேறு வழியின்றி, தான் வெறுத்து உதறிவிட்டுப் போன அந்த … Continue reading

தரக்குறைவு – ஜெயகாந்தன்


“இதுக்கோசரமாம்மே இருட்லே தனியே வந்து ரயில் ரோட் மேலே குந்திக்குணு அய்வுறே… ‘சீ சீ!… அவங் கெடக்கறான் ஜாட்டான்’னு நென்சிகினு எந்திரிம்மே…” -ஐந்தாறு பிரிவு தண்டவாளங்கள் நிறைந்த அந்த அகலமான ரயில்வே லைன் மீது இருட்டில், கப்பிக்கல் குவியலின் மீது அமர்ந்து அழுது கொண்டிருந்த அவள், இந்தக் குரலையும் இதற்குரியவனையும் எதிர்பாராதவளாய், இவனைக் கண்டு திகைத்தவள் போன்றும், அஞ்சியவள் போன்றும் பதைத்தெழுந்து நின்றாள். அப்போது கனைப்புக் குரலை முழக்கியவாறு சடசடத்து ஓடிவந்த மின்சார ரயிலின் வெளிச்சத்தில் அடிபட்டு, … Continue reading

பெரியார் முன்னிலையில் பேசியது – ஜெயகாந்தன்


1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம். நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர். அவரைப் பற்றி எனக்கு அதற்கு முன்னால் ஒன்றும் தெரியாது. அண்ணாமலை சர்வ கலாசாலையின் முன்னாள் வைஸ் சான்ஸலர் என்று பின்னால் அறிந்து கொண்டேன். அவர் பார்வைக்கு நல்ல வைதிகராகக் காணப்பட்டார். நெற்றியில் திருமண் அணிந்திருந்தார். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தியதில் முக்கியப் பொறுப்புப் பெற்றிருந்தவர் திரு. அ.வெ.ரா. … Continue reading

ஒரு பிடி சோறு – ஜெயகாந்தன்


“ஹேய்… ஹேய்ன்னானாம்!” – அதோ, விரலைச் சொடுக்கிக் கொண்டு குதித்தோடி வருகிறதே, ஒரு ‘கரிக்கட்டை’ – அவன்தான் ராசாத்தியின் ஏகபுத்திரனான மண்ணாங்கட்டிச் சிறுவன். தென்னாற்காடு ஜில்லாவாசிகளைத் தவிர மற்றவர்களுக்குப் பெயர் வேடிக்கையாகத்தானிருக்கும். ராசாத்தியின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட ஊமைப்பாசம் இப்பொழுது மகன்மீது சொரிகிறது… இப்பொழுது மண்ணாங்கட்டிக்கு ஏகக் குஷி – ஏன் தெரியுமா? அடுத்த அடுப்பிலிருந்த சோற்றைத் திருடித் தின்ற எக்களிப்புத்தான்! பூட்டா, திறப்பா? – பிளாட்பார வாழ்க்கைதானே? நாய் வந்து … Continue reading

சீசர் – ஜெயகாந்தன்


நிலைமை ரொம்பவும் ரசாபாசமாகிவிட்டது. கீழேயிருந்து கிளம்பிய திடீர்ச் சந்தடியில் – அப்பாவின் உரத்தக் குரலைக் கேட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்து எழுந்திருக்கப் பயந்து கொண்டு, இந்த சமயத்தில் அப்பாவின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்று – எழுந்து பார்க்காமலே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, கீழே கும்பல் கூடி நிற்கிற அவர்கள் முகத்தில் விழிக்க விரும்பாத தர்ம சங்கடத்தில் கால்மணி நேரமாய் நான் படுத்துக் கொண்டேயிருக்கிறேன். இதோ, என் தலைமாட்டிலிருக்கிற ஜன்னல் வழியாகப் பார்த்தால் எல்லாம் … Continue reading

வகைகள்