முந்தையவை

கவிதை

This category contains 15 posts

சிற்றிதழ்களில் கவிதை ஒரு கண்ணோட்டம் – தி.மா. சரவணன்


”உள்ளத்துள்ளது கவிதை – இன்ப உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிதை என்பது பாடு பொருளில் உயர்ந்திருக்க வேண்டும். உணரவும், உள்வாங்கவுமான செய்கை உன்னதமானது. அதை படைப்பாக வெளிக்கொணரும்போது நோகாமல், தெளிவாக புரியவும், அறியவுமாக வருவது அந்தபடைப்பை இலக்கியத் தகுதிக்கு உயர்த்தும். வடிவத்தைவிட கருத்தை தெளிவாய் பிரதிபலிக்கும் கவிதைகளும், கவிஞனுமே காலத்தால் போற்றப்படும் நிலையில் உள்ளனர். ”உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி … Continue reading

தமிழ்க் கவிதைகளை முன்வைத்து – மு.சேக் அப்துல்லா


பிரதி – அர்த்தப்படுத்துதல் – வாசிப்பு ஏதேனும் ஒரு வகையில் சமூகத்தில் படைக்கப்பெற்ற அல்லது கட்டமைக்கப்பட்ட, எந்த ஓர் பொருளினையும், நிகழ்வினையும் அல்லது வாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றவைகளை நாம் பிரதியாக கவனப்படுத்தலாம். இன்றுள்ள திறனாய்வு முறைகளில் பிரதி என்ற சொல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒன்றினையும் நாம் வாசிப்பிற்கு உட்படுத்தலாம் என்ற கருத்தியல் நவீன திறனாய்வுச் சிந்தனை மரபில் முன்னிறுத்தப்படுகிறது. இவற்றினை அடிப்படையாக்கி எது பிரதி / பிரதிக்கான வரையறை / படைப்பாளன் பிரதி / … Continue reading

கவிதை காத்திருக்கும் கலை – குவளைக் கண்ணன்


சுந்தர ராமசாமியின் கவிதை உலகம் பல விதமான நலப்படுகைகளைக் கொண்டது பூமி. இந்த நலப்படுகைகளில் ஏதோ ஒரு ஆழத்தில் உள்ள நீரோட்டம் தனக்கு மேலேயுள்ள கல்லையும் மண்ணையும் விலக்கித் தள்ளி மேலே கிளம்பிப் பூமியின் மேற்பரப்பில் வெளிப்படும் போது அது சுனையென்றும் எறு”றென்றும் அழைக்கப்படுகிறது. திரவப்பொருள் திடப்பொருளைத் துளைத்து மீறி வெளிப்படுகிறது. நீரோட்டத்தின் அளவையும் விசையையும் பொறுத்து சுனை நீர் பள்ளம் நோக்கி பாய்கிறது. தனது ஓட்டத்தின் வேகத்தால் தான் ஓடும் பாதையில் உள்ள ஊற்றுகளை உடைத்து … Continue reading

கவிதையின் கவிஞர் சுரதா – ஈரோடு தமிழன்பன்


கடந்த நூற்றாண்டின், முதல் ஐம்பதுகளில், பாரதிதாசன் கவிதை ஆளுமை அவருக்கென்று ஒரு பெரிய பரம்பரையை உருவாக்கி வைத்தது. பாரதி பரம்பரையில் பாரதிதாசன் ஒருவருக்கு மட்டுமே அப்படிப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சி வாய்த்தது. அவருடைய தமிழ் உணர்வு, சமூகப்பார்வை, அரசியல் சாய்வு பாரதிதாசன் பரம்பரை என்று முத்திரை பதித்த கவிஞர்களிடமும் தொடர்தன. கவிதையாக்க நெறிமுறைகளும் நியமங்களும்கூட பாரதிதாசத் தளத்தின் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தலைமையிலேயே அவர்களிடம் பதிவாகி இருந்தன. பாரதிதாசனின், பரம்பரையில் ஒருவர் சுரதா. சுரதா தனக்கென ஒரு பரம்பரையைக் … Continue reading

பின் நவீனத்துவ கவிதை – முனைவர் க. நாகநந்தினி


தமிழ்க் கவிதை மரபு மிக நீண்டது. சங்கக் காலப் பாடல்கள் அனைத்தையும் தொடங்கிச் சிற்றிலக்கியம் வரை வடிவமாற்றம் அனைத்தையும் உள்ளடக்கியது கவிதை மரபு. இம்மரபில் சொல் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவகவிதை படைக்கத் துடித்த பாரதியார் தான் புதிய வசன கவிதையாய்ப் படைத்தார். நவகவிதை, யாப்பற்ற கவிதை, விடுபா, கட்டற்றயாப்புக் கவிதை, வசன கவிதை என்று பல்வேறு பெயர்களுடன் எழுதப்பட்ட கவிதை வடிவம் மரபான பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ”மணிக்கொடி”, ”எழுத்து”, ”நடை” போன்ற … Continue reading

தற்காலக் கவிதைகளில் நவீனத்துவக் கூறுகள் – சு. ஜெயசீலா


ஆரம்ப கால கட்டத்தில் இலக்கியங்கள் கவிதை நடையில் தான் தோன்றின. இவ்வகைக் கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி, பாவகை போன்றவற்றைப் பெற்று வந்தன. இம்முறையிலிருந்து இன்று மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின்பற்றாமல் தற்கால கவிதைகள் வெளிவருகின்றன. வளர்ந்து வரும் இன்றைய கவிதைகள் நவீனத்துவத்தைப் பின்பற்றி வருகின்றன. ”நவீனத்துவம் என்பது அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை, இலக்கியம் எனச் சகல துறைகளையும் ஒரே சமயத்தில் பிரமிக்கத்தக்க விதத்தில் பாதித்த ஒன்று. நவீன … Continue reading

ஹைக்கூ கவிதைகளில் சமுதாயம் – த. ராஜ்குமார்


உலகில் நாம் காணுகின்ற காட்சிகளைக் கவிஞனின் கவிதை உள்ளமானது புதிய கோணங்களில், புதிய முறைகளில் காண்கிறது. அத்தகைய வேறுபட்ட பார்வையினால் தான் கவிஞனின் உள்ளத்தில் கவிதை வெளிப்படுகின்றது. அந்த அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள அந்த அனுபவத்திற்கு உருவங்கொடுப்பதே கவிதையாகின்றது. தமிழில் இன்று மிகுதியாகப் பேசப்படும் புதுக்கவிதை வடிவம் ஹைக்கூ எனலாம். ஹைக்கூ:- ஹைக்கூ என்பது ஜப்பானியக் கவிதை வகையினுள் ஒன்றாகும். ஹைக்கூ என்பதை ஐக்கூ என்று தமிழில் மாற்றி அதற்குச் ”சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற … Continue reading

பழமொழியும் கவிதையும் – ச. அகத்தியலிங்கம்


பழமொழி:- பழமொழி என்பது நாட்டுப்புறச் சொற்கலையாக்கங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கவிதைகள், கதைகள், கதைப்பாடல்கள் (ballads) விடுகதைகள், நாட்டுப்புற இசைகள், நாட்டுப்புறத் தொன்மங்கள் (Anyths), நாட்டுப்புற வீரக் கதைகள் (Legends), போன்றவை மொழியினால் ஆக்கப்பட்ட கலையாக்கங்கள். இத்தகைய சொற்கலையாக்கங்களில் ஒன்றுதான் பழமொழியும். எது பழமொழி? பழமொழி என்றால் என்ன என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதனைத்துல்லியமாக விவரண நிலையில் கூறுவது சற்றுக் கடினமே. எனினும் பல வேறு விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. பழங்காலந்தொட்டே நம்மிடையே வழங்கிவரும் ஒரு … Continue reading

சென்ரியு கவிதைகளில் சமுதாயச் சிந்தனை – ஏ. பால்பிரபுசாந்தராஜ்


தமிழ் இலக்கிய உலகில் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. சமூகப் பொருளாதார அரசியல் சூழல்களே இம்மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் எனலாம். அறிவியலின் நவீன வளர்ச்சி உலகின் பரப்பை சுருக்கிவிட்டது. இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மொழிபெயர்புக் கலையின் வளர்ச்சியினாலும் பிற நாட்டு இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுகள், வடிவங்கள் போல் வன தமிழில் தலை எடுக்கத் தொடங்கின. இவ்வகையில் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவம் தான் ”சென்ரியூ” கவிதை வடிவம். ”சென்ரியூ” – … Continue reading

தற்காலக் கவிதைகளில் நவீனத்துவக் கூறுகள் – சு. ஜெயசீலா


ஆரம்ப காலகட்டத்தில் இலக்கியங்கள் கவிதை நடையில் தான் தோன்றின. இவ்வகைக் கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி, பாவகை போன்றவற்றைப் பெற்று வந்தன. இம்முறையிலிருந்து இன்று மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின்பற்றாமல் தற்கால கவிதைகள் வெளிவருகின்றன. வளர்ந்து வரும் இன்றைய கவிதைகள் நவீனத்துவத்தைப் பின்பற்றி வருகின்றன. ”நவீனத்துவம் என்பது அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை இலக்கியம் எனச் சகல துறைகளையும் ஒரே சமயத்தில் பிரமிக்கத்தக்க விதத்தில் பாதித்த ஒன்று. நவீன அரசமைப்பு, … Continue reading

தமிழ்ஒளி கவிதைகள் – மையம் – மா. நடராசன்


அடையாளம்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணவர் என்ற முறையில், ஆரம்பகாலத்தில் திராவிட மாணவர் கழகத்தில் பங்கு கொண்டிருந்தவர் (அவர் வாழ்ந்த காலம் 21.09.1924 முதல் 29.3.1965). 1947-ல் புதுவையிலிருந்து சென்னை வந்து தாம் அணிந்திருந்த கருஞ்சட்டையைக் களைந்துவிட்டு, பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர். அவர்தான் விஜயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ்ஒளி. அவருடைய கவிதைகள் தனித்தன்மை கொண்டவை எனக் கூறவேண்டும். பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாணியில் இல்லாமல் ஒரு தனித்தன்மையோடு பாடல்கள் பாடினார். ”அந்தத் … Continue reading

புதுக்கவிதைகளில் நம்பிக்கை – சி. அருண்மொழிச் செல்வி


வாழ்க்கையில் ஏற்படும் இடர்கள் இடந்தெரியாமல் போக ஒவ்வொரு மனிதனுக்கும் ஊன்றுகோலாக இருப்பது நம்பிக்கையே. வாழ்வின் வளர்ச்சிப்பயிருக்கு நம்பிக்கையே வேர்; முயற்சியே நீர். துன்பம் ஏற்படும்போது துவண்டுவிடாமல் நம்மைக்காப்பது நம்பிக்கை. வாழ்வின் வெற்றிக்குக் காரணமான நம்பிக்கை பற்றி புதுக்கவிதைகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்றும், மனிதகுலத்தை மேம்படுத்துகின்றன என்று ஆராய்ந்தறிதலே இக்கட்டுரையின் குறிக்கோளாகும். அப்துல்ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து ஆகிய மூன்று கவிஞர்கள் கூறும் கருத்துக்கள் இதில் மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுக்குள் இருக்கும் நம்பிக்கை என்ற சுடர் அவனை வழிநடத்துகையில் அவனது … Continue reading

பாரதிதாசன் கவிதைகளில் யாப்பு – ம. தேவகி


முன்னுரை: இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த கவிஞர் பாரதிதாசன். நல்ல ஆசிரியராக சமுதாயச் சீர்திருத்தவாதியாக சிறந்த இதழாசிரியராக விளங்கியவர். பன்முகப் பாங்குக்கொண்ட பாவேந்தர் தொட்ட துறைகளிலெல்லாம் புகழ் நாட்டியவர். இத்தகைய சிறப்புடைய பாவேந்தரின் கவிதைத் தொகுப்புகளிலுள்ள கவிதைகளின் யாப்பு வடிவங்களைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். பாவேந்தர் கவிதைகளில் யாப்பு: பாவேந்தர் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்குக் கற்றறிந்தவர். இவர் ”இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும்” என்கிறார். ஆகவே பாவேந்தர் தன்னுடைய கவிதைத் தொகுப்புகளில் யாப்பு … Continue reading

பெண் கவிஞர்களின் பெண்ணியச் சிந்தனைகள் – மா. தனலட்சுமி


இக்கால இலக்கிய வகைகளில் ”கவிதை”யும் ஒன்றாகும். தமிழில் ”கவிதை” என்னும் இலக்கிய வகை காலந்தோறும் பல மாறுதல்கள் பெற்று வருகின்றது. பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ வேண்டும்; பெண்டிரைக் குடும்பத்தில் அடிமைகளாக நடத்தும் நிலை மாற வேண்டும் என்பதைப் பெண் கவிஞர்கள் தங்களுடைய கவிதைகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர். அக்கவிதைப் படைப்புகளின் வழிப் பெண்ணியச் சிந்தனையைச் சமுதாயத்திற்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது. ”பெண்ணியம் என்பது பெண்களின் மீதான ஒடுக்கு முறைகளை ஆராய்வதாகும், ஆண் மேலாதிக்கத்தை இனம் … Continue reading

தமிழில் மேலை இலக்கியக் கவிதை வடிவங்கள் – வி. அருள்


தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை உடையது. சங்கக்கவிதை வரையிலான வரலாற்றில் யாப்பின் நெறியில் கவிதைகள் பல வடிவங்களைப் பெற்றுள்ளன. தமிழ்க்கவிதைகளைப் பொதுவாக. மரபான யாப்பு வடிவக் கவிதைகள் – யாப்பு மீறிய புதுக் கவிதைகள் – பிறமொழி யாப்பு வடிவங்களைப் பின்பற்றிய கவிதைகள் என மூன்றின் அடிப்படையில் பகுத்துக்கொள்ளலாம். இவற்றில் பிறமொழிக் கவிதை வடிவங்களைத் தமிழ்க்கவிஞர்கள் உள்வாங்கிய முறையைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. தமிழில் பிறமொழிக் கவிதை வடிவங்கள்: மனிதன் வணிக நோக்கிலும், பிற … Continue reading

வகைகள்