முந்தையவை

தொல்காப்பியம்

This category contains 63 posts

கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்) – முனைவர் மு.பழனியப்பன்


அகம், புறம் என்ற இரு தொல்காப்பியப் பாடுபொருள்கள் தமிழிலக்கியங்களில் தொடர்ந்து கையாளப் பெற்று வருகின்றன. சங்க காலத்துடன் இவ்விரு பாடுபொருள்கள் நின்றுவிடாமல் அடுத்த அடுத்த காலப் பகுதிகளில் மேலும் மேலும் அவை வளமும் நலமும் சேரும் வகையில் படைப்பாளர்களால் கையாளப் பெற்று வருகின்றன. தமிழிலக்கிய வரலாற்றில் அகம் என்ற பாடுபொருள் புறம் என்ற பாடுபொருளைவிட அதிக அளவில் மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இல்லாமல் எடுத்தாளப் பெற்று வந்திருக்கிறது. புறம் என்ற பாடுபொருளில் பற்பல மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு … Continue reading

தொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியவகைகள் – மு.குமரகுரு


வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களின் எச்சங்களைத் தாங்கியுள்ள தொல்காப்பியத்தில் பழந்தமிழரின் பண்பாடு தொடர்பான செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் பண்ணத்தி, பிசி, முதுமொழி, பொய்ம்மொழி, நகைமொழி, நிலக்கடவுள்கள் (வழிபாடுகள்) போன்றவை யாவும் நம் தமிழ்ப் பண்பாட்டில் நிலவி வந்த, எழுதப்படாத இலக்கிய வகைகள் ஆகும். இதனை உரையாசிரியர்கள் கூறும் சான்றுகளைக் கொண்டு நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். பண்ணத்தி (இசை):- ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன்பே நாட்டுப்புற இலக்கியம் தோன்றியது. ”ஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்பே கதைகளும், … Continue reading

தொல்காப்பியர் காலத்திய திருமண முறைகள் – மு. கோமதி


இல்லறமல்லது நல்லறமில்லை மனித இனம் தற்போது நாகரிகம் பெற்று சிறந்து விளங்குவதற்குக் காரணம் திருமணம். அவர்தம் வாழ்க்கை முழுமையான பயனைப் பெறுவது திருமண வாழ்விற்குப் பிறகுதான். அத்திருமண முறைகள் நாட்டுக்கு நாடு, சமயத்திற்குச் சமயம், சாதி, மொழி போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடுகிறது. தலைவனும் தலைவியும் மனம் ஒன்றுபட்டு திருமண வாழ்வில் ஈடுபடும்போது அவ்வாழ்வு சிறக்கின்னறது. அறத்தோடு கூடிய இல்லற வாழ்வு இன்னும் ஒரு படி உயர்ந்து விளங்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் இத்தகைய இல்லற வாழ்விற்கு வழி வகுக்கும் … Continue reading

தொல்காப்பியப் புறத்திணையியலும் தொல்சமூகமும் – இரா.முருகன்


நிரைகவர்தல் குழுவாகக் கூடி வாழ்ந்த ஆதிமனிதனுக்கு வேட்டையே முதன்மையான தொழிலாக விளங்கியது. வேட்டையின் மூலம் பெறப்பட்ட ஒருசில விலங்குகளைப் பழக்கி வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டான். வேலையோடு அதிக பலனையும் தரக்கூடிய விலங்குகளில் பசுவே முதன்மை வகித்தது. இதனால் தொல் சமூக மக்கள் பசுக்கூட்டங்களைச் செல்வமாகக் கருதினர். இனக்குழுக்களுக்கு இடையேயான போரில் செல்வமாகக் கருதப்பட்ட பசுக்கூட்டங்கள் கவர்ந்து வரப்பட்டன. தொதவர், கோத்தர்களின் செல்வம் இவர்களுக்கு உடமையான எருமை மந்தைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. (பிலோ இருதயநாத், கொங்குமலை வாசிகள் … Continue reading

அன்றும் இன்றும் மெய்ப்பாடுகள் – ம. திருமலைசெல்வன்


முன்னுரை: தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது. நாடகத்தில் பாடுவோரும், ஆடுவோரும் பாடலின் பொருள் வெளிப்படப் பாடி, ஆடிக் கேட்போரும், பார்ப்போரும் பாட்டின் பொருளை விளங்கிக் கொள்ளும்படி நடிக்கின்ற நடிப்பு மெய்ப்பாடு எனப்படும் அக நிகழ்வை முகம் கண்ணாடி போல் காட்டும். வள்ளுவனாரும் நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் என்றார். எனவே மனக்குறிப்பிலிருந்து பொறியுணர்வால் பிறர்க்குப் புலனாகும் வண்ணம் மெய்யின் கண் வெளிப்படுவதே மெய்ப்பாடாகும். மெய்ப்பாடென்பது பொருள் வெளிப்பாடு. மெய்ம்மயிர்ச் சிலிர்த்தலும் மெய் வியர்த்தலும், கண்ணிமைத்தலும், … Continue reading

திருக்குறளில் மலர்ந்த தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – புலவர் கோ.சுவாமிநாதன்


முன்னுரை தமிழ் நெறியை கற்பிப்பது தொல்காப்பியம் தமிழர் நெறியை உணர வைப்பது திருக்குறள் இரண்டும் தமிழ் மக்களின் கலைக் களஞ்சியமாகும். தொல்காப்பிம் தமிழர்களின் நிதி நூல் திருக்குறள் அவாகளின் நீதி நூல் மனித வாழ்வுக்கு நிதியும் நீதியும் மிகுதியும் தேவைப்படுவதுபோல் தொல்காப்பியமும் திருக்குறளும் ஓதி உணர்ந்து வாழ்தல் மிகவும் சிறப்பைத் தரும் அதனால்தான் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் தொடர்புபடுத்தி திருக்குறளிள் மலர்ந்த மெய்ப்பாடுகள் எனக் கட்டுரை எழுத முற்பட்டேன் தொல்காப்பியம் அகண்டவானத்தினும் விசாலமானது திருக்குறள் சமுத்திரத்தினும் ஆழமுடையது அத்தனை … Continue reading

தொல்காப்பியர் காட்டும் காலம் – முனைவர் பா. மல்லிகா


முன்னுரை தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியங்களினின்றும் தோன்றுவதே இலக்கணம் ஆகும். தொல்காப்பியர் தம் நு‘லில் ஏறத்தாழ 260 இடங்களில் தமக்கு முன்பிருந்த அல்லது தம் காலத்தில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் பலரைக் குறிப்பிட்டுள்ளார் என்கிறார். எம்.ஆர். அடைக்கலசாமி (1991-27) தொல்காப்பியர் காட்டும் காலம் என்னும் இவ்வாய்வு தொல்காப்பியர் கூறும் கருத்து, உரைக்கருத்து, பிற கருத்து என்று பகுத்து ஆய்ந்து முடிவு கூறுவதாக அமைகிறது. தொல்காப்பியர் கூறும் காலம் … Continue reading

தொல்காப்பியர் காலப் போர்முறையும் நிகழ்காலப் போர்முறையும் – கா. கேசவன்


தொல்காப்பியர் கூறப்பட்ட போர்முறைகளையும், போர்க்காரணம், வெற்றி என்று தொல்காப்பியர் கூறியவற்றை இக்காலப்போர் முறைகளோடு ஒப்பிட்டுக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். புறத்திணை தொல்காப்பியரின் புறத்திணையானது முழுக்க, முழுக்க போர், போர்க்காரணம், போர்முறை, அரசரைப் போற்றுதல், போர்வெற்றி எனப்போர் சார்ந்தே அமைகிறது எனலாம். இறுதியில் மட்டுமே நிலையாமைக் கருத்தை உணர்த்தும் காஞ்சி திணையையும், ஆண்மகன் வீரம் உணர்த்தும் பாடாண் திணையையும் உள்ளடக்கியது எனலாம். புறத்திணையானது வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்று திணைப்பிரிவுகள் ஏழாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், … Continue reading

சிந்தாமணி வழங்கும் ஒன்பான் சுவை – முனைவர் ச. செந்தில்குமார்


முன்னுரை ஐம்பெரும் காப்பியங்களுள் முதற் காப்பியமாகத் திகழ்வது சிந்தாமணி. விருத்தமெனும் ஒன்பாவிற்கு உயர் கம்பன்(Kamban) என்றாலும், தேவரின் விருத்தத்தில் கம்பனும் ஓர் அகப்பை முகந்து கொள்கிறான். கற்பவர்கள் உளமகிழப் புதுப்புது வண்ணங்களை கையாள்வது சிந்தாமணியின் தனிச்சிறப்பு. ஒரு காப்பியத்தில் ஒன்பான் சுவையும் அமைந்திருத்தல் வேண்டும் என்பர் தண்டியாசிரியர். தொல்காப்பியர் மெய்ப்பாடு என்ற சொல்லாலும், தண்டியலங்கார ஆசிரியர் சுவை என்ற சொல்லாலும் இதனை வழங்குவர். நகையே யழுகை யிளிவரால் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென் றப்பா லெட்டே … Continue reading

மறவர் போற்றும் வீரப்போர் – பா.த. கிங்ஸ்டன்


தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. படை பலம் அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் காட்டியது, நால்வகைப் படைபலங்களே ஆகும். தனி ஒரு வீரரும் தம் வீரத்தை தயங்காது முன்னேறிக் காட்டினர். அவர்களின் போர்ப்படைகளிலே தேர்ப்படை, … Continue reading

அகத்திணை மரபுகள் – இரா. குணசேகரன்


அகத்திணை நெறியில் பொருள் வரம்பு உண்டு. உலகியல் வழக்கினும் செய்யுள் வழக்கினும் பயின்று வரும் பொருள்களை மூவகையாகப் பகுத்துப் பேசுவது அகத்திணை மரபு. அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வரையறைப்படுத்திப் பேசப்பெறும். அதனை, ”முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே நுவலுங்காலை முறை சிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை” (தொல். பொருள் இளம் நூ.3) என்று தொல்காப்பியர் இதற்கு விதி செய்து காட்டுவர். இவை செய்யுளில் பயின்று வருதலால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடையது. … Continue reading

யாயும் ஞாயும் – அகமா புறமா – பொ. தமிழ்ச்செல்வன்


தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்றைப் படிக்க முயலும் பொழுது ஆய்வுக் கண்ணும் தேவைப்படுகிறது. ஓர் இலக்கியம் அது தனிப் பாடலாக இருந்தாலோ, தொகுப்பாக இருந்தாலோ அது அகம் சார்ந்ததா புறம் சார்ந்ததா என்ற கேள்வியை நம் மனம் எழுப்புகிறது. இதற்கு என்ன காரணம்? அகம் இல்வாழ்க்கை தொடர்பானது. புறம் இல்வாழ்க்கையைச் செம்மையுற அமைக்க வேண்டி செயல்படும் போர் முதலிய செயல்களைக் கொண்டமைவது. இவற்றில் மனித மனம் அகத்தையே மிகுதியாக விரும்புகிறது. வன்மையில் கால் பதித்துள்ள போர், புகழ் … Continue reading

வினைச்சொற்களின் பாகுபாடுகள் – வை. சோமசுந்தரம்


வினைச்சொற்களின் பாகுபாடுகள் குறித்துத் தொல்காப்பியர், நன்னூலார் ஆகிய இரு இலக்கணிகளின் கருத்துக்களை இக்கட்டுரையில் காண்போம். வினைச்சொல்லாவது யாது? ”வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” இது தொல்காப்பியர் தரும் விளக்கம். ”செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே” இது நன்னூல் நவில்கின்ற விளக்கம். எனவே வினைச்சொல்லின் சிறப்பியல்பு காலம் காட்டுதல் என்பது இருநூலார்க்கும் உடன்பாடு. வினைச்சொற்களின் வகை:- வினைச்சொற்கள் இன்னவாம் என ஓதிய தொல்காப்பியர், அவை இத்துணைய … Continue reading

உள்வழிப்படுதல் – சி. சிதம்பரம்


தொல்காப்பியம் தமிழரின் முதல் அடையாளமாகத் திகழ்கிறது. தமிழ்மொழிக்காப்பு முயற்சி மட்டுமின்றித் தமிழின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், சமுதாய வாழ்வு பற்றிய சான்றுகளைப் பொதித்து வைத்த ஆவணமாகவும் அமைந்துள்ளது. அவற்றுள் இலக்கியம் படைக்கும் நெறிமுறை கூறும்பகுதி பொருளதிகாரம். தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கணமாக மட்டுமின்றி இலக்கியமாகவும் திகழும் மாண்புடையது. தொல்காப்பியர் படைத்துள்ள அகத்திணை மாந்தர்களுள் தலைவிக்கு முக்கிய இடமுண்டு. தலைவிக்கு உரிய மாண்புகளில் குறிப்பிடத்தக்கது. ”கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை” என்பதாகும். இக்கருத்தைச் சங்க இலக்கியப் பாடல்களுடன் ஒப்பிட்டு நோக்கப்படுகிறது. தொல்காப்பியத் தலைவி: … Continue reading

தொல்காப்பியம் வெளிப்படுத்தும் உயிர்ப் பாகுபாடுகள் – உ. சண்முகசுந்தரி


உலகத் தோற்றம்: நிலம், நீர், காற்று, விண், வளியென கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் இதனை, நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும் என்கிறார். உயிரினப் பாகுபாடு: புலன்களின் எண்ணிக்கை, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் … Continue reading

தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறும் திணைப்பொருள்கள் – அ. செல்வக்குமாரி


தமிழ் இலக்கண உலகில் அகப்பொருள் இலக்கணத்தை முழுமையாகக் கூறும் நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். இத் தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் வந்த அகப்பொருள் இலக்கண நூலான நம்பியகம் பொருளிலும் உள்ள அகத்திணையியலில் கூறப்பட்டுள்ள ஐந்திணைப்பொருட்களான முதல், கரு, உரி என்ற மூன்று பொருள்கள் பற்றிய செய்திகளை எடுத்துக்காட்டி ஒப்பீட்டு நிலையில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது. திணைப்பொருள்கள்: தொல்காப்பியம் ஐந்திணைகளுக்குரிய பொருள்களாக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் (தொல் பொருள் 3) என்ற மூன்றினைக் கூறுகின்றது. இதைப் பின்பற்றியே நம்பியகப் பொருளும் … Continue reading

தொல்காப்பியத் தொலைநோக்குச் சிந்தனைகள் – ஆ. மணவழகன்


தொலைநோக்கு: தொலைநோக்குச் சிந்தனை என்பது ஓர் உயரிய சிந்தனை அல்லது கருத்து. அச்சிந்தனை தோன்றிய சமூகம், நாடு என்பனவற்றிற்கு ஏற்புடையதாக இருத்தலோடு உலகப் பொதுமை நோக்கி எல்லாச் சமூகங்கள், நாடுகள் என்பவற்றிற்கும் ஏற்புடையதாக இருத்தலாகும். இச்சிந்தனைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபடாது. உலக எல்லையைத் தன் வட்டமாகக் கொண்டவை. எண்ணங்களும் அதன்வழிச் சிந்தனைகளும் சமூகத்திற்குச் சமூகம், இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. என்றாலும் இவ்வெல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உகந்ததாக, ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைவனவே தொலைநோக்கு … Continue reading

தொல்காப்பியம் வெளிப்படுத்தும் தமிழ்க்காதல் – முனைவர் கு. கண்ணன்


காதல் என்பது நம் வசத்தில் இல்லைஅது வினோதமான நெருப்புபற்றவைத்தால் பற்றாதுஅணைத்தால் அணையாது. – மிர்ஸா காலிப் காதல், வீரம் இரண்டும் தமிழர்களுடைய இரண்டு கண்கள். தொல் தமிழன் தொல்காப்பியர் தமிழர்களுடைய காதலை எவ்வாறு தொல்காப்பியத்தில் பதிவு செய்துள்ளார் என்பதைத் தொல்காப்பியத்தை உற்று நோக்குவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.தமிழனின் காதல் வாழ்க்கையின் இரு பகுதிகளாகக் களவும் கற்பும் அமையும். தமிழனின் களவு வாழ்க்கையும், கற்பு வாழ்க்கையும் நெறி உடையது. களவு என்பது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக … Continue reading

தொல்காப்பியத்தில் மகளிர் நிலை – முனைவர்.கோ.சரோஜா


இலக்கணம் என்பது தனக்கு முன்னும் பின்னும் நிகழ்கின்ற மரபுகளைச் சுடடிக்காட்டி நிற்பது. தொல்காப்பியர் மனிதனின் வாழ்க்கை இலக்கணத்தை அகம், புறம் என பாகுபடுத்தினர். இயல்பு நிலையில் மாறிய கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் சுட்டிக் காட்டினார். அன்பின் ஐந்திணையோடு மடலேறுதல், ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம், மக்கட்பாற்காஞ்சி ஆகியவற்றையும் படைத்தார். பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்தின் தொடக்கத்திலும், பெண்களின் நிலை, இயல்பாகவே அமைந்திருக்கிறது. தாய்மையின் கூர்தலமே மனிதனை€யும் விலங்குகளையும் வேறுபடுத்தியது என்பது வரலாற்று உண்மை.”தாய்மை என்றும் உணர்ச்சியே விலங்கினின்றும் மனிதன் தோன்றியதன் … Continue reading

தொல்காப்பியத்தில் தாவரங்கள் – செல்வி பி.சாவித்திரி


உலகம் தழுவிய உயர்ந்த சிந்தனைகள் பொதுமையான சிந்தனைகள் வாழ்வியல் நெறிகள் வடித்து தமிழ் வளர்த்தனர் புலவர். ஆனால், அடிமைக்கனவுகளை அறுவடை செய்வதற்கு அட்சயப் பாத்திரத்தை அடகு வைத்த கதையாய் தேர்வில் தோற்றுக் கொண்டிருக்கிறது பாடபுத்தகம் இந்நிலை மாற வேண்டும். அதற்கு பாடமும் வாழ்வும் ஒன்றாக இருக்க வேண்டும். வெற்றி மாலை சூட்டுவதற்காக ஜெயதேவதை பூச்செடிளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உலகம் உணர வேண்டும்.பூமி – வானம், இயற்கை – செயற்கை, அறிவியல் – வரலாறு, கலை-காலம், … Continue reading

வகைகள்