முந்தையவை

நேர்காணல்

This category contains 52 posts

நேர்காணல் – சு.வெங்கடேசன்


1054 பக்கங்கள், 600 ஆண்டுகால தமிழகத்தின் மதுரை தொடங்கி, கண்டி, உதயகிரி, ராய்ச்சூர், புத்தாளம் என இலங்கை வரை 28 வாழ்விடங்களுக்குள் பயணித்து அழைத்துச் செல்லும் இளம் படைப்பாளிக்கு 2010-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது, நவீன தமிழ் இலக்கியத் தடத்துக்குக் கிடைத்த பெருமை எனலாம். கவிஞராக படைப்புலகுக்குள் நுழைந்து பத்தாண்டு காலம் களப்பணி செய்து “காவல் கோட்டம்’ படைப்பைத் தந்துள்ளார். இவ்விருதுக்குரிய சு.வெங்கடேசனின் இப்படைப்பு 2009-ல் நூலாக வெளிவந்து பெரும் வாசகத் தளத்தை உருவாக்கியது. … Continue reading

ஒரு ஜாதிக்கு என்று தனி இலக்கியம் வரக்கூடாது – ஹெப்சிபா ஜேசுதாசன்


ஹெப்சிபா ஜேசுதாசன் அறுபதுகளில் இலக்கிய உலகில் வெகுவாக விவாதிக்கப்பட்ட எழுத்தாளர். அவரது முதல் நாவல் ”புத்தம் வீடு” இன்றும் வெகுவாக வாசகர்களிடையே பேசப்படும் ஒன்று. அறுபதுகளில் பிராமணர்களின் பேச்சுநடையிலேயே கதைகள் அதிகமாக வெளிவர, கன்னியாகுமரி மாவட்ட நாடார் இன மக்கள் பேசும் பேச்சுமொழியில் சிறப்பாக வந்த நாவல் என்ற சிறப்பை புத்தம்வீடு பெற்றது. அதன்பிறகு மாஜனீ, டாக்டர் செல்லப்பா, அனாதை என பல்வேறு நாவல்களைப் படைத்தார் ஹெப்சிபா. தமிழின் சிறந்த இலக்கிய படைப்புகளை ”கவுண்ட் டவுன் ஃபிரம் … Continue reading

கலை கலைக்காக அல்ல என்பது கீழைத் தத்துவம் – கி.அ.சச்சிதானந்தம்


கி.அ. சச்சிதானந்தத்தினை நேர்காணல் செய்ய முடிவு செய்ததே அவருடன் பழகிய இலக்கிய நண்பர்களின் நினைவோடைக்காகத்தான். அதற்காக அதனளவில் மட்டும் முக்கியத்துவம் பெறும் படைப்பாளியே இவர் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. அதையும் தாண்டி தனிப்பெரும் ஆளுமை சச்சி. பலகாலம் நாடோடியைப் போல ஊர் சுற்றித் திரிந்தவர். எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணித்த முதல் தமிழர். தேர்ந்த தத்துவப் பிரியர். ஜே. கிருஷ்ணமூர்த்தியின்பால் ஈர்க்கப்பட்டவர். நோபல் பரிசுபெற்ற ”சாமுவேல் பெக்கட்(Samuel Beckett)”டின் ”கோடோவிற்காக காத்திருத்தல்” (நாடகம்), தாகூரின் சித்ரா … Continue reading

ஒரு படைப்பாளிக்கு அவசியமானது – தமிழச்சி தங்கபாண்டியன்


கவிஞர் தமிழச்சி 2004-கிற்கு பிறகு அறியப்பட்ட பெண் கவிஞர். பன்முகப் பரிமாணம் கொண்டவர். நேரடி அரசியலுக்கு சென்றபிறகும் இலக்கியம் குறித்த உரையாடலை தொடர்ந்து கொண்டிருப்பவர். தீராநதி: உங்களுடைய பூர்வீகம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு என்ற சிறு கிராமம். உங்களின் அப்பா தங்கபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தென் தமிழகப் பகுதியில் முக்கிய பிரமுகராக ஒரு காலத்தில் அறியப்பட்டவர். அரசியல் செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பப் பின்புலத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களின் பால்ய பருவம், சிறு வயது வாசிப்பு அனுபவம், … Continue reading

விருதுகளை ஒரு அங்கீகாரமாக கருதவில்லை – நீல.பத்மனாபன்


தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபன் தமிழில் ஓர் அசலான படைப்பாளி. இதுவரை ”தலைமுறைகள்’” ”தேரோடும் வீதி” ”பள்ளிக் கொண்டபுரம்” ”உறவுகள்” உள்ளிட்ட இருபது நாவல்களும், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியம். 2004-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், தமிழிலிருந்து ஆங்கிலம், மலையாளத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்புகளிலும் இயங்கி வருகிறார். திருவனந்தபுரத்தில் 1938-ல் பிறந்த நீல.பத்மநாபன் மின்வாரியத்துறையில் இன்ஜினீயராக இருந்து … Continue reading

கவிஞர் மனுஷ்ய புத்திரன் – கேள்வி பதில்


கவிஞர் மனுஷ்ய புத்திரன் – ஓர் அறிமுகம் – பி.கே.சிவகுமார் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ்.அப்துல் ஹமீது. 1967-ல் பிறந்த இவரின் சொந்த ஊர் துவரங்குறிச்சி. இது திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. எண்பதுகளில் எழுத ஆரம்பித்தார். 1994 முதல் காலச்சுவடு இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது சமீபத்தில் தொடங்கிய உயிர்மை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். உயிர்மை என்கிற பதிப்பகமும் நடத்தி வருகிறார். கவிஞரானாலும் பத்திரிகைத் துறையில் அனுபவம் மிக்கவர். பல இலக்கிய, சமூக, … Continue reading

நேர்காணல் – ரவிக்குமார்


நவீன தமிழ் இலக்கிய தலித் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தலித்திய சிந்தனைக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளவர் எழுத்தாளர் ரவிக்குமார். பின்நவீனத்துவ சிந்தனைகளையும், படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்ததுடன், பின்நவீனத்துவ கோட்பாடுகளின் பின்புலத்தில் தமிழகச் சூழலை அணுகி, இவர் எழுதியுள்ள கட்டுரைகள் பல்வேறு விவாதங்களும் புதிய சிந்தனைப் போக்கும் உருவாக காரணமாக இருந்தன. நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவரான ரவிக்குமார் தலித், போதி என்னும் இரண்டு சிற்றிதழ்களைத் தொடங்கி சிறிதுகாலம் நடத்தினார். கண்காணிப்பின் அரசியல் (1995), உரையாடல் தொடர்கிறது … Continue reading

தமிழ் சினிமாவில் தமிழக வாழ்க்கை இல்லை, இலக்கியவாதிகளால் அதை உருவாக்க இயலும் – ஜெயமோகன் – நேர்காணல்


எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல். தமிழ் நாவல் உலகத்தை புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சன கருத்துகளும்கூட தற்கால இலக்கியப் பரப்பில் … Continue reading

கனிமொழி – நேர்காணல்


”பெண் மொழி, பெண் எழுத்து என்ற வார்த்தைகளே ஆண்களின் உருகாக்கம்தான்” பெண்கள் அதிகமாக கவிதை எழுதத் தொடங்கியிருப்பது, மிக சமீபத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வு. ஒரு இயக்கமாக இன்று நவீன தமிழ்ப் பெண் கவிதைகள் உள்ளன. இப்படி ஒரு இயக்கமாக நவீன பெண்கள் கவிதை உதயமாவதற்கு முன்பே, பெண்ணின் அனுபவமும் வலியும் நவீன தமிழ்க் கவிதைக்கு அந்நியமாக இருந்த சூழலில், கவிதை எழுதத் தொடங்கியவர் கனிமொழி. ஆண் குரலில் எழுதிய பெண் … Continue reading

நேர்காணல் – மனுஷ்ய புத்திரன்


தீராநதி: 1983லில் வெளிவந்த உங்களது ‘மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்’ தொகுப்பிலிருந்து 2005இல் வெளிவந்த ஐந்தாவது தொகுப்பான ‘மணலின் கதை’ வரை உங்கள் கவிதைச் செயல்பாட்டில் காணப்படும் தொடர்ச்சியும் மாற்றமும் என்ன? நான் மிகவும் இளமைக் காலத்தில் எழுதத் தொடங்கி அவை பிரசுர வாய்ப்பையும் பெற்றுவிட்டன. நான் உருவாகி வந்த பாதைகள் அனைத்திற்குமான தடயங்கள் அச்சுவடிவில் இருக்கின்றன. என்னுடைய சூழலில் பெரிய பத்திரிகைகளின் வழியே வந்து சேரும் எழுத்துக்கள் மட்டுமே ஒரே வாசிப்பனுபவமாக அப்போது இருந்தது. வைரமுத்துவும் மு.மேத்தாவும் … Continue reading

நேர்காணல் – தொ.பரமசிவன்


வரலாறு என்பது மேட்டிமைச் சமுதாயங்களின் கதையாடல்களாகவே உள்ளது; இதில் அறியப்படாத தமிழக வரலாறு புதைந்து போயுள்ளது: அந்தப் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்வதே இன்றைய முதல் தேவை என்ற புரிதலுடன் தீவிரமாக இயங்கி வருபவர் பேராசிரியர் தொ. பரமசிவன். அந்த வரலாற்றை அடித்தட்டு மக்கள் வழக்காறுகள் மூலமே மீட்டெடுக்க முடியும் என்ற மனப்போக்குடன் உறுதியாகச் செயல்பட்டு வரும் தொ.பரமசிவன் தமிழக தீவிர வாசிப்பு வட்டாரத்தால் தொ.ப. என எளிமையாக அழைக்கப்படுகிறார். எந்தவிதமான அலங்கார, அணிவகுப்பு அடைமொழிகளுக்குள்ளும் அடைபடாத தொ.ப., … Continue reading

நேர்காணல் – எம்.டி.வாசுதேவன் நாயர்


எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள்  விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும்.  ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய  ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை  இலக்கிய வடிவத்தில் இவரளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை. மத்திய, மாநில சாகித்ய  அகாதமி, ஞானபீடம் இன்னும் மலையாள மண்ணின் … Continue reading

நேர்காணல் – நாசர்


கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக, வில்லன் நடிகராக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பன்முகப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நாசர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்பவர். அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அக்கறையை அவர் தயாரித்த, இயக்கிய சில திரைப்படங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பொது நிகழ்வுகளில் அவர்  வெளிப்படுத்தும் கருத்துகள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் குறித்ததாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இரு திரைப்படப் பள்ளிகளில் படித்தபோதும் … Continue reading

தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் – ரமேஷ்-பிரேம்


பின் – நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் – பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். இதுவரை 15 புத்தகங்களும் 4 மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரி அரசின். ”கம்பன் புகழ் … Continue reading

ஓவியர்கள்தான் முதல் சிருஷ்டி கர்த்தாக்கள் – இராம. பழனியப்பன்


இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். பல முக்கியமான சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லியிலுள்ள லலித்கலா அகாதமி, லண்டனிலுள்ள பிரிட்டீஷ் மற்றும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல முக்கிய அருங்காட்சியகங்களில் இவரது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. பல சர்வதேச விருதுகளையும் பெல்லோஷ’ப்களையும் பெற்றுள்ளார். ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் கலாச்சார பிரதிநிதியாக பயணம் … Continue reading

நேர்காணல் – பேராசிரியர் தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து


பேரா. “தமிழவன்” கார்லோஸ் சபரிமுத்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். அண்மையில் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசியராகத் தமிழ் கற்பித்து வருகிறார். தமிழில் இலக்கியத் திறனாய்வு, இலக்கியத் தத்துவங்கள், நாட்டுப்புறவியல், பற்றிய நூல்கள் எழுதியுள்ளார். இவரது அமைப்பியல் (Structuralism) என்ற நூல் சிறுபத்திரிக்கைச் சூழலில் வரவேற்கப் பட்டிருக்கிறது. எழுத்து, கசடதபற, க, போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கும் இவர், தற்காலத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்திருக்கும் வெகு சில தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவர். … Continue reading

எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல – சல்மா


அடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தின் பெண்களது அவல நிலையை விவரிப்பதுடன், யதார்த்தத்தில் வார்த்தெடுத்த சித்திரங்களுடன் வாசகரின் கவனத்தை உலுக்கியெடுக்கிறது. சுயானுபவத்திலிருந்து வெடித்துக் கிளம்பியவைதான் சல்மாவின் படைப்புகளில் வெளிப்படும் கேள்விகளும், நசுக்கப்பட்ட கனவுகளுக்கான புலம்பல்களும். எழுதத் தடைவிதித்த கணவருக்கும், புகுந்த வீட்டுக்கும் தெரியாமல் படைப்பைத் தொடர்வதற்கான முகமூடிதான் தனது புனைபெயர் என்று பல நேர்முகங்களில் சொல்லியிருக்கிறார். … Continue reading

நேர்காணல் – “அது நன்னன் முறை” – முனைவர் நன்னன்


சென்னைத் தொலைக்காட்சி முதன்முதலாகத் தமிழகத்தில் தொடங்கிய காலத்தில் மக்களுக்கு பயன்படும் பலவகை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். கண்மணிப்பூங்கா, தமிழறிவோம், எண்ணும் எழுத்தும், வாழ்க்கை கல்வி போன்று மொழி மற்றும் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலம் அது. முனைவர் நன்னன் அவர்களின் எண்ணும் எழுத்தும், தமிழறிவோம், உங்களுக்காக எனும் நிகழ்ச்சிகள் அச்சமயம் மிகப் பிரபலம். நன்னன் அவர்கள் தமிழ் எழுதவும், படிக்கவும், சொற்களைச் சரியாக உச்சரிக்கவும், பிழையின்றிப் பேசவும் என்று மிக அழகாக, சிறு குழந்தைகளும் … Continue reading

தமிழ்ப் பேராசிரியர்கள் – தமிழ்ப் படிப்பதில்லை – இரா. நாகசாமி


இரா. நாகசாமி தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் வரலாற்றுத்துறையில் நேர்மையுடனும் திறமையுடனும் அரும்பணி ஆற்றிவரும் மிகச் சிலருள் ஒருவர். தமிழக வரலாற்றுக்கு அடிப்படையாக உள்ள அரிய பல சான்றுகளாக விளங்கும் கல்வெட்டுகள், பட்டயங்கள், சிற்பங்கள், படிமங்கள், கட்டடங்கள் மற்றும் ஓவியங்கள் முதலானவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். கோவை மாவட்டம், ஈரோடு தாலுகா ஊஞ்சலூரில் 1930 – ல் பிறந்த நாகசாமி, சமஸ்கிருத மொழியில் முதுகலைப் பட்டமும் டில்லி மத்திய தொல்பொருள் ஆய்வுப் பள்ளியில் அகழ்வாய்வு பண்டைய சின்னங்களைப் … Continue reading

கவிஞர் மீராவுடன் ஓர் நேர்காணல் – அப்துல் ரகுமான்


”அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை. பாலாவும், மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ. சேஷாசலம், க.வை. பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது. வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி சுப்ரமணியன், வசந்தகுமார் – இவர்கள் எல்லாம் … Continue reading

வகைகள்